நீண்ட நாள் கழித்து இன்று எழுத நேரம் வந்தது!
இனி நல்ல காலந்தான்.
இனி நல்ல காலந்தான்.
சேர சோழ மற்றும் பாண்டியர் காலத்தில் கடுந்தமிழில் கொடுந்தமிழில் பெயரிடப்பட்ட காலங்கள் மாறி இடைக்காலத்தில் கோவிந்தசாமி மாடசாமி மன்னார்சாமி ரெங்கசாமி என சாமிகளின் பெயர்களிடப்பட்டதுபோய் இன்று சமஸ்கிருதம் எனும் வடமொழியில் பெயரிடும் பித்து கன்னாபின்னா என்று தலைக்கு ஏறியுள்ளது.
அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ அவரவர் காதில் விழுந்த பெயரினை இட்டுக்கொள்கின்றனர். அதிலும் ஜ ஸ ஹ ஸ்ரீ ஹ என்று கண்டிப்பாக வந்தால்தான் வாழ்க்கை சிறக்குமாம்.
அதிலும் ஆணோ பெண்ணோ பெயர் ஸ்ரீ-யில் தொடங்கவேண்டும் அல்லது முடியவேண்டும். எனது மச்சினனின் குழந்தையின் பெயர் ஆதி ஸ்ரீ. இது ஆணா பெண்ணா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக