புதன், 27 மார்ச், 2013

பெயரிலே என்ன இருக்கிறது? 3

ரேகா - அனைவரும் அறிந்த பெயர்.  நமது ஜெமினி கணேசனின் மகள் மற்றும் ஹிந்தி நடிகையாக பல காலம் குப்பை கொட்டியவர். 

அவரின் பெயருக்கான அர்த்தம் அவருக்கே தெரியுமோ தெரியாதோ!

இராமாயணம் அறிந்த அனைவருக்கும் இந்த பெயரையும் தெரியும்.  இலட்சுமணன் சீதா தேவிக்கு போட்ட கோடு லட்சுமண ரேகை.  அதாவது வடமொழியில் லட்சுமண ரேகா. 

ரேகை - அல்லது கோடு.  இப்படி ஒரு பெயரா?

கிரணம்.  கிரகணமில்லை.  அதாவது ஒளி.  சூரிய ஒளி - சூரிய கிரணம் - சூரிய ரேகை. 

கிரண் என்று வடநாட்டில் பெண்களுக்கு பெயர் வைப்பர்.  நடிகை கிரண்.  கிரண் பேடி.  கிரணம் - ஒளி.

சசிரேகா என்ற பெயருண்டு.  சசி - சந்திரன்.  சசிரேகா.  சந்திரனின் ஒளி.
நிலவொளி எனலாம்.

சசிகலா.   சந்திர ஒளி.  கலா என்பதற்கு கலை என்ற பொருளுண்டு.  இங்கு நிலவொளி எனலாம்.

கலாவதி.  கலையிற் சிறந்தவள்.  சரஸ்வதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக