வெள்ளி, 22 மார்ச், 2013

பெயரிலே என்ன இருக்கிறது? 2

ஆதி ஸ்ரீ என்ற பெயர் ஒரு ஆண் பிள்ளையின் பெயராம்!

மிக்க மகிழ்ச்சி.

இனி சில பெயர்களைக் குறித்து பார்ப்போம்.

முதலில் வரும் பெயர் பிரேம லதா.

பிரேமம் என்றால் காதல், அன்பு, பாசம்.

லதா என்பது கொடி.

காதற்கொடி,

அன்புக் கொடி என்பதுதான் அதன் அர்த்தம்.

அடுத்ததாக இன்னுமொரு கொடி.  அதாவது ஸ்வர்ண லதா.  ஸ்வர்ணம் என்பது உலகமறிய தங்கத்தைக் குறிக்கும்.  தங்கக்கொடி என்றும் பொற்கொடி என்றும் சொல்லலாம்.

என் மச்சினனின் முதல் குழந்தையின் பெயர் சுப ஸ்ரீ.  அது பெண் குழந்தைதான்.

சுபம் என்றால் முடிவு.  முதல் குழந்தைக்கு முடிவு என்று யாராவது பெயர் வைப்பார்களா?

இரண்டாவது ஆண் குழந்தை அதன் பெயர் ஆதி ஸ்ரீ.  பெண் குழந்தையின் பின்னால் ஸ்ரீ சேர்க்கிறீர்கள் ... சரி.  ஆண் குழந்தைக்கும் ஸ்ரீ தானா?
ஸ்ரீ என்பது இலக்குமியை அல்லவா குறிக்கும்.  இலக்குமிக்கும் ஆணின் பெயருக்கும் என்ன தொடர்பு?

ஸ்ரீ என்ற பெயருக்கு பொருத்தமான ஒரே ஆண் ராமன்தான்.  ஸ்ரீ ராம்.  இராமன் என்பவர் திருமாலின் கூறு.  திருமாலின் மனைவி இலக்குமி.  எனவே ஸ்ரீ-க்கு உரிமையான ஆண் அவர் மட்டுமே.

சரி மச்சினனின் பிரச்சினைக்கு வருவோம்.  மச்சினனின் பையன் ஆதி ஸ்ரீ.  ஆதி என்பது துவக்கம்.  இரண்டு குழந்தைக்கு மேல் அவர்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்கையில் கடைசிக் குழந்தை என்பது எப்படி துவக்கமாகும்?

என்ன உலகமடா இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக